மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு தமிழக முதல்வருக்கு நன்றி:கடைமடை துணை கால்வாய்களுக்கு தண்ணீர் வரத்தை கண்காணிக்க குழு அமைக்க மஜக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறந்தாங்கி,மே.24:சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மேட்டூர் அணை மே மாதத்தில் திறந்து வைத்து வரலாறு படைக்கும் தமிழக முதல்வருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தன் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாக திகழ்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நாகுடி மற்றும் மேற்பனைக்காடு உள்ளிட்ட சுமார் 200 கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை நிரப்பி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை விளைவிக்கும் காவிரி தண்ணீர் வந்து சேரும் கடைமடை பகுதியாக உள்ளது. இப்பகுதியை தாண்டி செல்லும் காவிரிநீர் கடலில் உபரியாக சென்றுசேரும்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே மாதம் 24ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.
சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே, அதாவது சுமார் 90 ஆண்டுகளாக இப்பகுதி காவிரியின் கடைமடை பகுதியாக பயனடைந்துவருகிறது. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் முறைவைத்து புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் உள்ள கடைமடை விவசாய நிலங்களுக்கு வந்துசேரும்.
இவ்வாறு முறைவைத்து வரும் காவிரி தண்ணீர் நெற்பயிரை விளைவிக்கும் அளவுக்கு அனைத்து கடைமடை கிராமங்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து விவசாயிகளுக்கு உதவிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.