ஏம்பல்- கோவை இடையே பஸ் இயக்க கோரிக்கை


அரிமளம் ஒன்றியம் ஏம்பலை சுற்றி மதகம், குருங்களூர், திருவாக்குடி ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் வேலைக் காக புதுக்கோட்டை அல்லது திருச்சிக்கு பஸ்சில் சென்று அங்கிருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாவ துடன், வீண் அலைச்சலால் பெண் தொழிலா ளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

இதை தவிர்க்க ஏம்பலில் இருந்து கே.புதுப் பட்டி, அரிமளம், கடையக்குடி, புதுக்கோட்டை வழியாக கோவை மற்றும் திருப்பூருக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments