ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை




கீரமங்கலம் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பழுதடைந்த பழைய ஆபத்தான நிலையில் கட்டிடங்கள் உள்ளது. அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு ஓட்டுக்கட்டிடம் என சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் கஜா புயல் நேரத்தில் உடைந்து சேதமடைந்துள்ளது. இந்தக் கட்டிடங்கள் பழுதடைந்து ஓடுகள், மேற்கூரைகள் கொட்டிக் கொண்டிருப்பதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வந்தனர். அதனால் இந்த பழுதடைந்த ஆபத்தான பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருகை இல்லாத இந்த நேரத்தில் பழுதடைந்த கட்டிடத்தை உடைத்து அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள ஏராளமான அரசு பள்ளிகளில் அப்போது கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த ஆபத்தான கட்டிடங்களை கோடை விடுமுறை காலத்திலேயே இடித்து அகற்றினால் மாணவர்களை அச்சமின்றி பள்ளிகளுக்கு அனுப்புவோம் என்கின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments