விவசாயியிடம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை




விவசாயியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே மேலகோட்டையை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (வயது 38). விவசாயி. இவரது செல்போனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் வந்த லிங்கில் தொடர்பு கொண்டாபோது, இந்த லிங்கில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பும்படி இருந்தது. பின்னர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, முகமது மொய்தீன் பணம் செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் பேசிய நபர் கூறியுள்ளார்.

ரூ.1 லட்சம் மோசடி

இதை நம்பிய முகமது மொய்தீன் பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 568-ஐ இணையதளம் மூலம் அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது மொய்தீன் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments