கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2059 மாணவர்கள் தேர்வு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2059 மாணவர்கள் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 
 கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும்  மொத்தம் மாணவர்களில் 25 சதவீதம் பேர் கட்டணமின்றி சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான தொகையை அரசே செலுத்துகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 21 தனியார் பள்ளிகளில் மொத்தம் 2059 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 211 தனியார் பள்ளிகளில் சேர 3089 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 78 பள்ளிகளில் 695 மாணவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமிருந்த 133 பள்ளிகளில் குலுக்கல் முறையில் 1364 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் 211 பள்ளிகளில் 2059 மாணவர்கள்  தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். 880 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments