சேதமடைந்த மின் கம்பம், வினியோக பெட்டிகளை புகைப்படம் எடுத்து அனுப்ப மாவட்ட வாரியாக செல்போன் எண்கள் அறிவிப்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை




சேதமடைந்த மின் கம்பம், வினியோக பெட்டிகளை புகைப்படம் எடுத்து அனுப்ப மாவட்ட வாரியாக செல்போன் எண்கள் அறிவிப்பு
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்சார தடை, அவசர அழைப்புகளுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். சேதமடைந்த மின்சார கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி, மின் வினியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள், மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன: நுகர்வோர்கள் தங்கள் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து அவைகளை தங்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு அனுப்பலாம்.

 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களுக்கு என்ற 94861-11912 எண் உள்பட மாவட்ட வாரியாக எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 மின்மாற்றி, கம்பம், தெருவிளக்குப் பெட்டி, மின்வினியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான அதிகமான மின் அழுத்தப் புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்களை மின்னகத்தின் தொடர்பு எண் 94987- 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். 

இதுதவிர, www.tangedco.gov.in என்ற வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம். புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வலைதளமான www.tnerc.gov.in பதிவு செய்யலாம். இதுதவிர, www.tangedco.gov.in என்ற மின்சார வாரியத்தின் வலையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் சி.வீரமணி தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments