புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம்

     புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை தமிழக பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிற நிலையில் முதன்மை கல்வி அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments