ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படமாட்டாது ரிசர்வ் வங்கி விளக்கம்
        இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி முகம் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே, காந்தி படத்துக்கு பதிலாக, வேறு தலைவர்களின் படங்களை ரூபாய் நோட்டுகளில் வைப்பது பற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்களின் படங்களை வைக்க பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், இத்தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி முகத்துக்கு பதிலாக வேறு தலைவர்களின் முகத்தை வைக்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் அதுபோன்ற எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments