இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் வேண்டாம்: முதல்வரிடம் மக்கள் நலக் கூட்டமைப்பு கோரிக்கை




    புதிய பேருந்து நிலையத்தை இளையான்குடியில் அமைக்க வேண்டாம் என சிவகங்கைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன்தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பயன்தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தைத் திறந்து வைக்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது, மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி மனுக் கொடுத்து வலியுறுத்தினர்.
 
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மக்கள் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments