புதுக்கோட்டை வழியாக செல்லும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க கோரிக்கை 
புதுக்கோட்டை வழியாக செல்லும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர் 

செங்கோட்டை - சென்னை எழும்பூர் 

புதுக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு அதிவிரைவு ரயிலை வாரத்தில் மூன்றுநாட்கள் வியாழன் மற்றும் சனி, ஞாயிறு கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

சென்னை எழும்பூர் - செங்கோட்டை 

அதை போல் புதுக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு அதிவிரைவு ரயிலை வாரத்தில்  மூன்று நாட்கள் புதன், வெள்ளி,சனி சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலை தினசரி இயக்க மதுரை ரயில்வே கோட்ட கலந் தாய்வுக் குழு உறுப்பி னர் (தென்காசி எம்.பி நியமனம்), உச்சநீதி மன்ற வழக்குரைஞர் டாக்டர் ராம் சங்கர் நேற்று முன்தினம் டில்லியில் உள்ள இந்திய ரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று சிலம்பு ரயிலை தினமும் இயக்க கோரிக்கை வைத்துள்ளார். ..

உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments