சவூதி அரேபியாவில் உயிரிழந்த ரமேஷ் சுப்பிரமணியனின் உடலை உடனடியாக clearance செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு நவாஸ் கனி MP தகவல்
சவூதி அரேபியாவில் உயிரிழந்த பொறியாளர் திரு ரமேஷ் சுப்பிரமணியன் அவர்களின் உடல் தமிழகம் கொண்டு வர உதவப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் Clearance செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் திரு ரமேஷ் சுப்பிரமணியன் அவர்களின் உடலை தாயகம் அனுப்புவதற்கு குடும்பத்தினர்
சவூதி அரேபியா ஜெத்தா தமிழர்கள் சங்கம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொறியாளர் திரு ரமேஷ் சுப்பிரமணியன் அவர்களின் உடல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவியாளர்கள் மூலம் முழுமையாக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு விரைவாக Clearance செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளிநாட்டு வாழ் தமிழ் உறவுகள் இதுபோன்ற கோரிக்கைக்கு தொடர்ந்து அணுகலாம், அனைத்து உதவிகளுக்கும் எப்போதும் என்னுடைய அலுவலகம் தயாராக இருக்கும்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments