கீரமங்கலம் காசிம் புதுப்பேட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
    கீரமங்கலம் காசிம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயினுல் அரபு நிஷா, காசிம்புதுப்பேட்டை ஜமாஅத் தலைவர் சர்புதீன், பேரூராட்சி உறுப்பினர் நிஷா, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பஷீர் முகமது ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வடிவு மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தை வழிநடத்தினார்கள். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெரு வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. இதில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம் குறித்தும், அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதால் கிடைக்கும் சலுகைகள் குறித்தும், அரசின் கல்வித்திட்டங்கள் குறித்தும் மாணவர்கள் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments