தடைக்காலம் முடிவடைந்தது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல கடந்த 2 நாட்களாக ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு தங்கள் படகுகளில் எரிபொருளை நிரப்பினர்.
பின்னர் பிடித்து வரும் மீன்களை கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ் கட்டிகளை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். இங்கிருந்து மீன் பிடிக்க செல்லும் படகுகள் தேசியக்கொடியுடன் செல்வது வழக்கம். இதனால் பழைய தேசியக் கொடியை இறக்கி விட்டு விசைப்படகில் புதிய தேசியக்கொடியை கட்டிக்கொண்டு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க தயாராகினர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நாளை (வியாழக்கிழமை) மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments