போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2 வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2 வாரங்களுக்கு ஒரு முறை என முதல் மற்றும் 3-வது புதன் கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறுவார்.

இதில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்பதுடன் அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது முந்தைய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்யப்படும்.

எனவே, இரு வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments