சென்னையில் இருந்து இராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் சொகுசு கப்பல் பயணம் தொடங்க வேண்டும் நவாஸ்கனி எம்பி கோரிக்கை


சென்னையில் இருந்து இராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் சொகுசு கப்பல் பயணம் தொடங்க வேண்டும் நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில்.,

சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு சொகுசு கப்பல் பயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார்.

ஆனால் பாண்டிச்சேரி அரசு அனுமதி அளிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

சொகுசு கப்பல் பயணத்தை தமிழ்நாட்டிற்குட்பட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களான இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு துவங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தென்மாவட்ட சுற்றுலா தளங்களுக்கு சொகுசு கப்பல் பயணத்தை துவங்குவதன் மூலம் என்னுடைய தொகுதிக்குட்பட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை மேம்படுவதற்கு பயனுள்ளதாய் அமையும்.

எனவே இது குறித்து பரிசீலித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் இயக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments