காரைக்குடி அருகே விபத்து- லாரி மீது வேன் மோதி 2 பெண்கள் பலி





விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கழனிவாசல் சூரங்குடி பைபாஸ் சாலையில் வசிப்பவர் ரீகன் (வயது30) தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூத். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி ரூத்தின் உறவினர்கள் 26 பேர் ஒரு வேனில் கழனி வாசல் நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வேன் காரைக்குடியை அடுத்த திருச்சி-ராமேசுவரம் சாலையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே வந்தபோது சிமெண்டு ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மீது திடீரென வேன் மோதியது. 

இதில் வேனில் பயணம் செய்த 26 பேர் படுகாயம் அடைந்தனர். தவப்பிரியா (22) மணிமேகலை (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் ஒரு பெண்ணின் கை துண்டானது. ஒரு குழந்தை உள்பட 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாங்குடி எம்.எல்.ஏ., தாசில்தார் மாணிக்க வாசகம் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் உறவினரை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments