ராசிபுரம் அருகே குழந்தை மீது ஏறி இறங்கிய கார்... வைரலாகும் பகீர் வீடியோ!


ராசிபுரம் அருகே குழந்தை மீது ஏறி இறங்கிய கார்...   வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்  

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது 2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த காரை ஓட்டுனர் திருப்புவதற்கு முயன்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென்று காரின் பின்புறம் வந்துள்ளார். ஓட்டுனர் காரை திருப்ப முயன்றபோது திடீரென்று குழந்தை காரின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்துள்ளான். இதை அறியாமல் ஓட்டுனர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது குழந்தையின் மீது கார் இருமுறை ஏறி இறங்கி உள்ளது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே கார் ஓட்டுனர் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தியுள்ளார். பின்னர் பொதுமக்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments