தேவக்கோட்டை : கீழே கிடந்த பதினாறரை பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு காவலர்கள் பாராட்டு.. உரியவரிடம் நகை ஒப்படைப்பு..!


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனது கடையின் படிக்கட்டில் கிடந்த பதினாறரை பவுன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

தேவகோட்டை - திருப்பத்தூர் சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது இப்ராஹிம், நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்ற போது படிக்கட்டில் நகைப்பை கிடப்பதை பார்த்தார்.

பின்னர் உடனடியாக அதனை எடுத்துச்சென்று தேவகோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் நகைப்பையை தவறவிட்டது போரிவயல் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என தெரியவந்ததையடுத்து அவரிடம் நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments