சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா இடையே வாரம் மும்முறை இயங்கிய ரயில் மீண்டும் இயக்கம்


ஜூலை 3ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து சேவை தொடக்கம். ஜூலை 5ம் தேதி ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து சேவை தொடக்கம் - தென்னக ரயில்வே அறிவிப்புசென்னை சென்ட்ரல் - ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா - சென்னை சென்ட்ரல் இடையே வாரம் மும்முறை இயங்கிய ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வண்டி எண் 16031 சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5:15க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 10:3க்கு ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 16032 ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:30க்கு ஸ்ரீ வைஷ்ணவ் தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்காம் நாள் காலை 6:50க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments