திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு விமான சேவை கோலாலம்பூர் வழியாக இயக்கப்படுகிறது





        கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா நிறுவனம் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு இரண்டு சேவைகளை கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவை வழங்க உள்ளது.

இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வழியாக வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு செல்ல உள்ளது. திருச்சியில் இருந்து இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மலேசிய நேரப்படி காலை 5.05 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தை சென்று அடையும். பின்னர் மீண்டும் கோலாலம்பூரில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு ஹனோய் விமான நிலையத்தை அடையும். அதன்பின் மீண்டும் ஹனோய் விமான நிலையத்திலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மலேசிய நேரப்படி இரவு 7.50 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்து அடையும். தொடர்ந்து கோலாலம்பூரில் இருந்து காலை 8 மணிக்கு கோலாலம்பூர் நேரப்படி புறப்பட்டு இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு திருச்சி வந்தடையும் என விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் கார்போ சேவையில் இயக்கப்படலாம் என தெரிகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments