இனி அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டியில் இருந்து நேரடியாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இராமேஸ்வரம் சென்னை நெல்லூர் ஹைதராபாத் நகரங்களுக்கு நேரடியாக ரயிலில் செல்லலாம்

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில்  செகந்திராபாத் - இராமேஸ்வரம் இடையே சிறப்பு   ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன நிறுத்தப்பட்டது.மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. 

இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான தலைநகர் சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது கோரிக்கை இருந்து வந்தது .

இந்நிலையில்  செகந்திராபாத் - இராமேஸ்வரம்  ஸ்பெஷல் ரயில் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக  இந்த இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல் இயங்க இருக்கிறது.
செகந்திராபாத் - ராமேஸ்வரம்

07685 செகந்திராபாத் ராமேஸ்வரம் வண்டி புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 

சென்னை எழும்பூர் (09.30) , 
திருவாரூர் (15.15), 
திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34),
பட்டுக்கோட்டை (16.50), .
அறந்தாங்கி (17.50), 
காரைக்குடி (19.10) 

வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரம் - செகந்திராபாத்

07686 ராமேஸ்வரம் செகந்திராபாத் வண்டி வெள்ளிக்கிழமைகளில்  காலை  08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு 

காரைக்குடி (12.05), 
அறந்தாங்கி (12.29), 
பட்டுக்கோட்டை (13.13), 
அதிராம்பட்டினம்(13.29),  திருத்துறைப்பூண்டி   (14.03),
திருவாரூர் (15.15), 
சென்னை எழும்பூர் (21.50) 

வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது. 

இந்த சிறப்பு வண்டிக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments