அடிப்படை வசதிகள் செய்து தராத கை.களத்தூர் ஊராட்சி தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி மனு துணைத்தலைவர்-வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்





பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கை.களத்தூர் கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வகுமார் மற்றும் 10 வார்டு உறுப்பினர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. செலவு செய்ததாக ஊராட்சி செயலாளரை மிரட்டி பில் போடுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாததால் காந்தி நகர், பாதாங்கி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களை தலைவரின் கணவர் தகாத வார்த்தையால் திட்டி, ஆளும் கட்சியை சேர்ந்த என்னை யாரும் ஏதுவும் செய்ய முடியாது, என்கிறார். அரசு திட்டங்களுக்கு தடையாக இருக்கிறார். அரசின் திட்டங்களுக்கு வேலை நடைபெறாமலேயே, வேலை நடைபெற்றதாக பணம் எடுக்கின்றனர். சுமார் 40 ஆதிதிராவிடர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை கலெக்டர் பெற்றுக்கொடுக்க வேண்டும். தலைவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டத்தை கூட்ட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தை கலெக்டரே பொறுப்பேற்று நடத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments