புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரியில் செஸ், வினாடி-வினா போட்டிகள் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
            44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இம்மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செஸ் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே வட்டார அளவிலான செஸ் போட்டிகளும், மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகள் இணையதளம் வாயிலாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் சார்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செஸ் விளையாட்டு தொடர்பான வினாடி-வினா போட்டியில் 40 பேரும், செஸ் போட்டியில் 10 மாணவிகளும், 36 மாணவர்களும் என மொத்தம் 86 பேர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கணேசன், மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் அடைக்களவன் ஆகியோர் நடத்தினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments