எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் முறைகேடு: புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை




        தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீது எல்.இ.டி பல்புகள் டெண்டர் விவகாரம் தொடர்பாக தி.மு.க. பகிரங்க குற்றம்சாட்டி வந்தது. அதை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரின் வீடுகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மாவட்ட அளவில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் மீது தொடக்கநிலை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தொடக்க நிலை விசாரணைக்கு கடந்த 2017-ம் ஆண்டு எல்.இ.டி. பல்புகள் வாங்குவதற்காக நடத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி சம்பந்தமான அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்களை உடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments