கருமேகங்கள் சூழ்ந்து காணப்படும் கோபாலப்பட்டிணம் இரண்டாவது நாட்களாக மழை


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் இன்று ஜூலை 23 சனிக்கிழமை  பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரண்டாம் நாளாக  மாலை 6.00 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. 6.30 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.  

இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புகைப்படங்கள் உதவி : தோப்பு நண்பர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments