இந்திய அளவில் பயணிகளை கையாளுவதில் திருச்சி விமான நிலையத்துக்கு 11-வது இடம்


திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதே நிலையில் உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, குவைத், 
இலங்கை போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் வெளி–நாட்டு சேவைகளாக இயக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர உள்நாட்டு விவாத சேவைகளாக ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்த காரணத்தினால் குறைந்த அளவே விமான சேைவயை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா பெருந்தொற்று உலக அளவில் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு விமான சேவைகளாக இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் அனைத்தும் தற்போது நிரந்தர சேவையாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திருச்சி விமான நிலையம் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் பதினோராவது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விமான நிலையங்களில் முதல் நான்கு இடங்களில் புதுடெல்லி, மும்பை, சென்னை, கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் உள்ளன.

இந்த வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் 11-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் திருச்சி விமான நிலையமானது 98,591 வெளிநாட்டு பயணிகளை கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments