கீழக்கரையின் பழம்பெரும் வரலாற்று சிறப்புகளை பாதுகாக்க புதிய முயற்சி கீழக்கரை அருங்காட்சியம் - கலந்தாலோசனைக் கூட்டம்...






கீழக்கரை அருங்காட்சியம் அமைப்பது குறித்த முதல் கலந்தாய்வு கூட்டம்  27.07 .2022 இரவு 8:30 மணியளவில் கீழக்கரை Q- Cafe கடற்கரை விடுதியில் நடைபெற்றது. 




 நிகழ்வில் கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் நிர்வாக குழு உறுப்பினர் எம்.பி.அஹ்மது நிஷார்  அவர்கள் தலைமையில், அணைத்து ஜமாஅத் முன்னாள் துனை செயலாளர் ஜாஹிர் ஹூசைன்   மற்றும் 18 வாலிபர் தர்ஹா நிர்வாக குழு உறுப்பினர் குத்புதீன் ராஜா  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முதல் கட்ட கலந்தாய்வில் கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் இஞ்சினியர் கபீர்  எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில துனை தலைவர் அப்துல் ஹமீது,  எழுத்தாளர் மஹ்மூது நெய்னா, கீழக்கரை ஜக்காத் கமிட்டி பொருளாளர் சீனி முகம்மது, ஜின்னா தெரு மதரஸா நிர்வாகி சஃபீக், சகோதர் ஆதில் மற்றும்   கே.எம்.எஸ் சதக்கத்துல்லா உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் அருங்காட்சியகம் அமைப்பதன் குறிகோள், நோக்கம்,  வரலாற்று ஆவணங்கள், இலக்கியங்கள், இலட்சினைகள், கல்வெட்டுக்கள், அடையாளங்கள்,  கலாச்சாரம்,  பண்பாட்டு தொன்மையினை பாதுகாப்பது, கீழக்கரை குறித்த கல்வெட்டுக்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துவது, எதிர்கால தலை முறையினருக்கு கீழக்கரை சமூகத்தின் அடையாளங்களை கொண்டு போய் சேர்ப்பது, பள்ளி மாணவர்களுக்கு காணொளி மற்றும் லேசர் ஒளி வழியே வரலாற்று தரவுகளை காட்சிப்படுத்துவது என பல செயல் திட்டங்கள் குறித்தும், அதனை முன்னெடுப்பது குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கீழக்கரையில்  அருங்காட்சியகம் அமைப்பதற்கு முன்பே மெய் நிகர் அருங்காட்சியம் ( Virtual Museum) அமைத்து அதன் மூலம் நமது கலாச்சாரம், சமூக  வளர்ச்சியினை காட்சிப்படுத்துவது, சுதந்திர போராட்ட தியாகி சவுக்கத் அலி போன்ற  ஆளுமைகளின்   சேவையை இணைய செய்தி மூலம் மக்களுக்கு அறியத்தருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சிறப்பாக 2 மனி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் , கீழக்கரை அருங்காட்சியகம் என்ற வாட்ஸ் குழுமம் ஒன்றை உருவாக்கி, உறுப்பினர்களை , ஆர்வலர்களை இணைத்து கருத்து பரிமாற்றங்களை விரிவு படுத்துவது, கீழ்க்கரையில் எஞ்சி இருக்கும் தொண் பொருட்களை மீட்பது, அதனை டிஜிட்டல் கானொளியாக பதிவு செய்வது, வரலாறு மறந்த ஆளுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது அதற்கான குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குழுமத்தில் விரும்புபவர்களையும், வரலாற்று, இலக்கிய ஆர்வலர்களையும், ஊடகவியலாளர்களையும் இணைத்து,  அருங்காட்சியக  திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நன்றி: கீழக்கரை டைம்ஸ் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments