அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்ற சிறப்பு ரயில் நாளை (ஜூலை 31) முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு 
அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்ற வாரந்திர சிறப்பு ரயில் நாளை (ஜூலை 31) முதல் ஞாயிறுதோறும் இனி  வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே பராமரிப்பு பணி காரணமாக நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்பட்ட கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பராமரிப்பு பணி முடிவடைந்ததால் மீண்டும் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது.

* எர்ணாகுளம்-நாகப்பட்டினம் (வண்டி எண்: 06035) இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று (சனிக்கிழமை) முதல் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக நாகப்பட்டினம் எர்ணாகுளம் (06036) இடையே மாலை 6.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படும்.
* லோக்மான்ய திலக்-நாகப்பட்டினம் (01161) இடையே ஆகஸ்டு 26-ந்தேதி முதல், மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக நாகப்பட்டினம்-லோக்மான்ய திலக் (01162) இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ்ரெயில், வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி முதல் காலை 6.05 மணிக்கு வேளாங் கண்ணியில் இருந்து இயக்கப்படும்.

* லோக்மான்ய திலக்-நாகப்பட்டினம் (01163) இடையே வருகிற செப்டம்பர் மாதம் 6-ந்தேதி முதல் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், வேளாங்கண்ணி வரை நீட் டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக நாகப்பட்டினம் லோக்மான்ய திலக் (01164) இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற செப்டம்பர் மாதம் 8-ந்தேதி முதல் மதியம் 2.35 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments