சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரங்களை மட்டுமே நட வேண்டும் பசுமைக்குழுவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்




        புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் அகற்றுதல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துதல் தொடர்பான பசுமைக்குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசுகையில், ‘‘மாவட்ட பசுமைக் குழுவானது பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள அனைத்து மரங்களையும் வரைபடமாக்குதல் மற்றும் பொதுநிலங்களில் உள்ள அனைத்து, விழுந்த மரங்களின் விரிவான பட்டியலை தயார் செய்து, பட்டியலை அவ்வப்போது புதுப்பித்தல் குறித்தும், பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு உரிய சரிபார்ப்பு மற்றும் விமர்சன மதிப்பீட்டிற்கு பின்னரே அனுமதி வழங்குதல் வேண்டும். போதுமான நாற்றுகள், செடிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பூர்வீக மரங்களின் நர்சரிகளை அமைப்பதற்காக சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் போன்றவற்றை அணி திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மரம் நடுவதற்கான வருடாந்திர திட்டங்களை உருவாக்கிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மட்டும் நன்மை பயக்கும் பூர்வீக இனங்கள் மரம் மட்டுமே நடப்பட வேண்டும்’ என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா, வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி அலுவலர்கள், மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

© 2022 All Righ
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments