புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் சேர ஜூலை 20 கடைசித் தேதி

     புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய இடங்களிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவா்கள் வரும் ஜூலை 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இப்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற் பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ வங்கிக் கணக்கு மற்றும் அட்டைகள் மூலம் செலுத்தலாம். பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், இலவச பேருந்து பயண அட்டை, வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 ஆகியவை வழங்கப்படும். ஐடிஐ வளாகத்திலேயே மாணவா் சோ்க்கைக்கான உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள கடைசி நாள் ஜூலை 20.

மேலும் விவரங்களை அறிய புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலைய தொடா்பு எண்கள் 04322- 221584, 94863 11243 (புதுக்கோட்டை), 98654 47581(விராலிமலை).

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments