கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், தங்களது கண்ணீரை காணிக்கையாக்கினர்.
கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த சோக சம்பவத்தின் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தினம், ஆண்டுதோறும் ஜூலை 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குழந்தைகளை பறிகொடுத்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், உயிரிழந்த தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தும், புத்தாடைகளை படைத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அது மட்டுமின்றி, பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, மலர் தூவி, குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த துயர சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை பறிகொடுத்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை. குழந்தைகள் இறந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் 18 ஆண்டுகளாக குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.