ஆயிங்குடி அரசு பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்

அறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை விசாலாட்சி வரவேற்றார். நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து பள்ளிக்கு தேவையான பேன், பிளாஸ்டிக் சேர், மண்பானை, டிபன் பாக்ஸ், டீ கேன், நோட்டு, பேனா, பென்சில், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், தலைவர்கள் படங்கள், 150 பல்வேறு வகையான மரக்கன்றுகள் உள்பட 50 வகையான பள்ளிக்கு பயன்படும் பொருட்களை வழங்கினர். விழாவில் ஊராட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments