அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவம்பர் வரை நீட்டிப்பு






அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி வழியாக  இயங்கி கொண்டிருக்கும் எர்ணாகுளம் – நாகப்பட்டினம் (வேளாங்கண்ணி)-எர்ணாகுளம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற நவம்பர் மாதம் வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.



நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் சோதனை ஓட்டம் வருகின்ற 20.07.2022 அன்று நடைபெற்றிருக்கிறது அதன் பிறகு இந்த மாதமே வேளாங்கண்ணி வரை இந்த ரயில் இயக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த ரயிலை வாரமிருமுறை இயக்கவும் அடுத்த வருடம் தினசரியாக இயக்கவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கேரளா பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் கூறியுள்ளார்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(வண்டி எண்:06035) இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

வேளாங்கண்ணி-எர்ணாகுளம்

வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036) இடையே மாலை 6.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.




எங்கெங்கு நின்று செல்லும்?

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 
கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி , சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி , பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments