எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 5-ந்தேதி கடைசி நாள்
        இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்தவர்கள், அரசு, அரசு நிதியுதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், துறைகள், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டுக்கு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றிதழ்களுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள முடியும். அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைமுறைகளான சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments