ராமநாதபுரம்: இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

மண்டபம் அருகே இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்து திரும்பிய பயணிகள் வேனும் ராமநாதபுரம் நோக்கி சென்ற வேனும், மண்டபம் கேம்ப் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


இதில், மண்டபம் பகுதியைச் சேர்ந்த அன்சர் அலி, முகைதீன் அப்துல்காதர், ரசபு ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது சேது என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்துள்ளது. இது குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments