ஆவுடையார் கோவில் தாலுகாவில் மீமிசல் , பொன்பேத்தி , கரூர், திருப்புனாவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது.பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் அல்லது 26 வாரங்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்

நாட்டின் 75-வது பொன் விழா சுதந்திர தினத்தையொட்டி  ஜூலை 15 முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு
பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடப்படும் என்றும் அதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் , பொன்பேத்தி , திருப்புனாவாசல் , கரூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதை போல் முதல் டோஸ் இரண்டாவது டோஸ் (கோவிஷீல்டு, கோவேக்சின் )
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உள்ள நேரங்களில் அந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்..

தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஆதார் அட்டை,    கொண்டு வருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் காப்பி எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஆவுடையார் கோவில் தாலுகா பொதுமக்கள் மற்றும்  சுற்றுவட்டார பொதுமக்கள்  போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு : 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் முடிந்திருக்க வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணை எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அதே நிறுவனத்தைச் சேர்ந்த பூஸ்டர் தடுப்பூசியே செலுத்த வேண்டும். மாற்றி போடக்கூடாது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments