காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிக்க வேண்டும் பயனிகள் கோரிக்கை


காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிக்க வேண்டும் பயனிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இருந்து தினசரி பல்வேறு அலுவல்கள் காரணமாக ஏராளமான பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவ, மாணவியர் சென்னைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது அறந்தாங்கி பகுதியில் இருந்து இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமும், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு பேருந்துகளில் சென்று பின்னர் அங்கிருந்து ரயில்கள் மூலமும் சென்னை சென்று வருகின்றனர்.

ஒரு காலத்தில் முக்கிய ரயில்தடமாக இருந்த காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திரு வாரூர், மயிலாடுதுறை, சென்னை தடம் தமிழ் நாட்டிலேயே கடைசியாக அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டதால், இங்கிருந்து சென்னைக்கு செல்ல
இன்னும் ரயில் வசதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 5.30 மணிக்கு பல்லவன் விரைவு ரயில் புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.

காரைக்குடியில் தினசரி காலை 5.30 மணிக்கு புறப்படும் பல்லவன் விரைவு ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்தால், புதுக் கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்,கட்டுமாவடி மணமேல்குடி, கோட்டைப்பட்டிணம் மீமிசல் , ஆலங்குடி, திருமயம் வட்டங்களை சேர்ந்தவர்களும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டங்களை சேர்ந்தவர்களும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஒரு சில பகுதிகளை சேர்ந்த வர்களும் எளிதாக சென்னைக்கு சென்று வர முடியும். மேலும் அறந்தாங்கியில் இருந்து தினசரி 4.30 மணிக்கு பல்லவன் விரைவு ரயில் புறப்படும் பட்சத்தில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு மீன் உணவுகள், இளநீர், காய்கறிகள் போன்றவற்றை ஏற்றி அனுப்ப முடியும். இதன் மூலம் இப்பகு தியைச் சேர்ந்த விவசா யிகள், மீனவர்களுக்கு வரு வாய் கிடைப்பதோடு, தெற்கு ரயில்வேக்கும் லக்கேஷ் மூலம் வருவாய் கிடைக்கும். மேலும் தினசரி நூற்றுக்கணக்கான பய ணிகளும் பயன்பெறுவார்கள்.

எனவே தெற்கு ரயில்வே நிர் வாகம் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை இயக்கி வரும் பல்லவன் விரைவு ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அறந்தாங்கி பகுதி பொதுமக் கள் மற்றும் மாணவ, மாணவியர்.வர்த்தகர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments