ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில்சாலை வசதி கேட்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்






ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான சாலை அமைத்து விட்டதாகவும், இதற்கு மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுடைய இடத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி இல்லாததால் யாரும் இறந்தால் அவர்களை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் உடல்நிலை பாதித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் கூட முறையான வசதி இல்லாமல் உள்ளது. எனவே நிரந்தரமான சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments