மணமேல்குடி கோடியக்கரை பகுதியில்வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு






மணமேல்குடி கோடியக்கரை பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. கோடியக்கரை செல்லும் வழியில் பல்வேறு விதமான மரங்கள் உள்ளது. இந்த பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

கோடியக்கரை காட்டுப்பகுதியிலிருந்து மரங்களை கடத்துவது மற்றும் சட்ட விரோதமான செயல்களை தடுக்கவும் கோடியக்கரை செல்லும் வழியில் காப்புக்காடு பகுதியில் வனத்துறை சார்பில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனை சாவடியில் வனச்சரக அலுவலர் மேகலா தலைமையில் வனவர்கள் அன்புமணி, சோனைமுத்து, அந்தோணிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments