ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய அறந்தாங்கி MLA ST.இராமச்சந்திரன்


ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1850000 (பதினெட்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ஒதுக்கீடு செய்து, அதனடிப்படையில் நேற்று (29-07-2022) வெள்ளிக்கிழமை பூமிபூஜை விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மாண்புமிகு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST.இராமச்சந்திரன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் பொன்னாடை அணிவித்தும், மாணவிகள் புத்தகம் கொடுத்தும் வரவேற்றனர். 

2021-2022  கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு , மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கித்தந்தார்கள். மேலும் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு  கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

இந்நிகழ்வில்  ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு சேர்மன் , வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவுடையார் கோவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், வர்த்தக சங்கத்தலைவர் செபஸ்தியான்,பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா  அமரடக்கி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  விஸ்வநாதன் கூடலூர் முத்து, உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், ஆவுடையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர்  , கான்ட்ராக்டர் செதுராமன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட  அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: 
டி.தாமரைச்செல்வன்,
தலைமை ஆசிரியர்,
அமேநிபள்ளி, ஆவுடையார்கோவில்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments