வேளாங்கண்ணிக்கு மீண்டும் ரெயில்கள் இயக்கம்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்கள் வருகிற வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட உள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாகை-வேளாங்கண்ணி அகல ரெயில் பாதை போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த வழியாக தினந்தோறும் பயணிகள் ரெயில்கள் மற்றும்  காரைக்கால்  
(கம்பன்) எக்ஸ்பிரஸ் - வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இது தவிர வாரந்தோறும் வேளாங்கண்ணியில் இருந்து கோவாவுக்கு வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தது.

மின்மயமாக்கும் பணிகள்

கொரோனா ஊரடங்கால் வேளாங்கண்ணிக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே நாகை-வேளாங்கண்ணி ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேளாங்கண்ணிக்கு வருகிற வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

காரைக்கால்-வேளாங்கண்ணி

அதன்படி(வண்டி எண்:06733) தினந்தோறும் காலை 9.40 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் ரெயில் 10.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

இதேபோல் (வண்டி எண்:06734) வேளாங்கண்ணியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இதே ரெயில் 5.45 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரெயில் திருமலைராயன்பட்டினம், நாகூர், வெளிப்பாளையம், நாகை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

வேளாங்கண்ணி-நாகை

இதேபோல்(வண்டி எண்:06842) இரவு 9.15 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் பயணிகள் ரெயில், 9.45 மணிக்கு நாகை சென்றடையும்.

இதே ரெயில்(வண்டி எண்:06841) அதிகாலை 4.15 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்.

மற்றொரு ரெயில்

இதேபோல்(வண்டி எண்:06834) வேளாங்கண்ணியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மற்றொரு பயணிகள் ரெயில் 11.20 மணிக்கு நாகை சென்றடையும்.

இதே ரெயில்(வண்டி எண்:06833) காலை 11.30 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு 11. 55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

வேளாங்கண்ணி-திருச்சி

இதேபோல் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில்(வண்டி எண்:06839) வேளாங்கண்ணியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு நாகை சென்றடையும்.

இதே ரெயில்(வண்டி எண்:06840) இரவு 8 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments