பட்டுக்கோட்டை அருகே கோர விபத்து : லாரி சக்கரத்தின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!






பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த ஒட்டங்காடு ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன்.இவருடைய மகன் முத்து கிருஷ்ணன் (வயது 42). இவரது நண்பர் அரசமாணிக்கம் (57). இவர்கள் இருவரும் இன்று காலை 11 மணி அளவில் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு ஒட்டங்காடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அரசமாணிக்கம் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிள் பட்டுக்கோட்டை கொண்டிகுளம் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டு இருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கிடங்கிற்கு அரிசி லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் அரசமாணிக்கம் படுகாயம் அடைந்தார். பின்னால் அமர்ந்து இருந்த முத்துகிருஷ்ணன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை குட்டையன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (39)என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments