அறந்தாங்கியில் போலீசார், பொதுமக்கள் நட்புறவு கிரிக்கெட் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல்த்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நட்புறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் போலீசாருக்கு மன அழுத்தம் குறைவதோடு, புத்துணர்ச்சி பெருகி, குற்ற செயல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்த்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்த்துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கவும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்களிடையே சமூக ஒற்றுமையை ஏற்படுத்திடவும் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காவல்த்துணைக்கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

 போட்டியில் கலந்து கொண்ட காவல்த்துறை நண்பர்கள், இளைஞர்கள் ஆகியோர் விறுவிறுப்பாக விளையாடினர். இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் துளசிராமன் உள்ளிட்ட காவல்த்துறையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் போலீசாருக்கு மன அழுத்தம் குறைவதோடு, புத்துணர்ச்சி பெருகி, குற்ற செயல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments