மரிங்கிப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் நீர்மேலாண்மை, வரலாறு குறித்து விழிப்புணர்வு களப்பயணம்




    அன்னவாசல் ஒன்றியம் மரிங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் நீர்மேலாண்மை மற்றும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு களப்பயணம் சென்று வந்தனா்.
அன்னவாசல் ஒன்றியம் மரிங்கிப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் நீர்மேலாண்மை மற்றும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் விதமாக மரிங்கிப்பட்டி அரசு பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு பள்ளி மாணவ, மாணவிகளை நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கவிநாடு கண்மாய், அந்த கவிநாடு கண்மாய்க்கு தண்ணீர் வரும் சேந்தமங்கலம் அணைக்கட்டு ஆகியவற்றை பார்ப்பதற்காக தமிழர்களின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் அழைத்து சென்று சுற்றிக்காட்டினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் திருப்பதி, புதுகை செல்வா, எடிசன், வீரா, ப்ரீத்தி, ஷேக் ஆகியோர் செய்திருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments