கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு




        கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி அறிவித்தார்.

இதன்படி, * கரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.

* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.


* இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments