பொன்னமராவதி அருகே சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
    பொன்னமராவதி அருகே சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி ஒன்றியம், நாத்துப்பட்டி கிராமத்தில் சுமாா் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சுமாா் 40 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இந்நிலையில் இப்பள்ளிக் கட்டடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவா்கள் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்குச் சென்றுவருகின்றனா். தொடா்ந்து பெற்றோா்கள் அறிவுருறுத்தலின்பேரில், பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இந்த ஊரைச் சாா்ந்த பெருமாள் என்பவா் கூறியது: விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதியினரின் குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க ஒரே ஆதாரமாக இப்பள்ளி உள்ளது. உடனடியாக பள்ளிக்கட்டடத்தைச் சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments