திருச்சி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 'எல்.எச்.பி. ரேக்' பெட்டியுடன் இயக்கம்




    திருச்சி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12664-12663) எல்.எச்.பி. ரேக் பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இதனை திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.திருச்சியில் இருந்து முதன்மை பராமரிப்புடன் இயக்கப்படும் முதல் எல்.எச்.பி. கோச் ரெயில் இதுவாகும். இந்த எல்.எச்.பி. பெட்டிகள் விபத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. பழைய ரேக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக இருக்கை வசதி, வேக திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. உட்புறம் அலுமினியத்தால் ஆனது, ஒவ்வொரு கோச்சிலும் அதிக வேகத்தில் பயணிக்கும் போது திறமையான பிரேக்கிங் செய்வதற்கான "மேம்பட்ட நியூமேடிக் டிஸ்க் பிரேக் சிஸ்டம்" பொருத்தப்பட்டுள்ளது, நவீன உட்கட்டமைப்பு மற்றும் லக்கேஜ் ரேக்குகள் மற்றும் பரந்த ஜன்னல்களில் விளக்குகளை ஒருங்கிணைக்கிறது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments