புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விடுதிகள் உரிமம் பெற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
        புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆகியவற்றின் கீழ் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்கள், இல்லங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04322-222270 தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments