ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் உமா தேவி தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரியா குப்பு ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகையில், ஆவுடையார்கோவில் மேலவீதி முக்கத்தில் ஒரு தனியார் வீட்டிலிருந்து வரும் சாக்கடை நீர் சாலையில் வந்து குளம்போல் தேங்கி நிற்பதால் சாலையில் செல்வோர், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஏரிகளில் பழுதடைந்துள்ள மடைகளை சரிசெய்ய வேண்டும். புத்தாம்பூர் ஊராட்சியில் ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாமல் ஆழ்குழாய் கிணறு இயங்காமல் உள்ளது. விளானூர், அமறடக்கி ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்துள்ள பழைய காலனி வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மீமிசலில் சலைகள் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றனர். 

கூட்டத்தில் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், விதை இருப்பில் நெல் உள்ளது. விவசாயிகள் அதனை பெற்றுக்கொள்ளலாம். பிரதமரின் கிசான் திட்டத்தில் பணம் பெறுபவர்கள் அத்திட்டத்தில் தகுந்த ஆவணங்களை கொடுத்து புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று கூறினார். 

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments