ஆதனக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு




    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மேளாண்மை  உறுப்பினர்கள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர். அதில் எங்களது பள்ளியில் 2013 ஆம் ஆண்டிலிருந்து தலைமை ஆசிரியராக பணிபுரியும் சுமதியிடம். பெற்றோர்களாகிய நாங்கள் பள்ளியின் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்தும் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்தும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பலமுறை விவாதித்துள்ளோம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்திற்கு பின்னர் பள்ளியின் கல்வி தரம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதற்கு முன்பாக இங்கு படித்த பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு  துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் தலைமை ஆசிரியர் சுமதி பணிநியமிக்கப்பட்டதில் இருந்து எந்த மாணவரும் எந்த போட்டியிலும் பங்கு பெறுவதில்லை.

மேலும் தலைமை ஆசிரியரே பள்ளிக்கு தாமதமாக வருவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப் பொருட்களை மாணவர்களிடம் வாங்கிவரச் சொல்லி பள்ளி வளாகத்திலேயே பயன்படுத்துகிறார். புகையிலை வாயோடு மாணவர்களின் தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தி வாய் கொப்பளிப்பது மாணவர்களின் தண்ணீரைக் குடிப்பது மாணவர்களின் புத்தக பையை தலையணையாக வைத்துக் கொள்வது என பொருத்தம் இல்லாத வேலைகளை செய்து வருகிறார். இதனால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது இது குறித்து தாங்கள் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments